×

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது: சிங்களப் படையினரின் அத்துமீறலை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது: அன்புமணி இராமதாஸ் அறிக்கை

சென்னை: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது : சிங்களப் படையினரின் அத்துமீறலை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது; வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்  7 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது!புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை கடந்த 20-ஆம் தேதி சிங்களப் படை கைது செய்தது. அவர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக  தமிழக மீனவர்களை கைது செய்து சிங்களப் படை  மீண்டும் அத்துமீறலை அரங்கேற்றியிருக்கிறது!கடந்த ஜூன் மாதம் மீன்பிடி பருவம் தொடங்கிய பிறகு நடைபெறும் பத்தாவது கைது நடவடிக்கை இதுவாகும். இது வரை மொத்தம் 84 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக  இந்திய அரசு கண்டிக்காததும், எச்சரிக்காததும் தான் மீண்டும், மீண்டும் அத்துமீறும் துணிச்சலை சிங்கள அரசுக்கு கொடுத்துள்ளது!தமிழக மீனவர்களை தாக்குவதோ, அத்துமீறி கைது செய்வதோ கூடாது என இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்.  ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும்!…

The post தமிழக மீனவர்கள் 7 பேர் கைது: சிங்களப் படையினரின் அத்துமீறலை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது: அன்புமணி இராமதாஸ் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Union Government ,Annpurani Ramadas ,Chennai ,Tamil Nadu ,Central Government ,
× RELATED விருப்ப ஓய்வில் சென்ற ஐஏஎஸ் மீண்டும் பணியில் சேர்ந்தார்